தீபாவளிப் பட்டாசு வெடிப்பு: மாசுபட்ட நகரமாக புது டெல்லி அறிவிப்பு!

by guasw2

இந்தியாவில் தீபாளிக் கொண்டாட்டங்களுக்குப் பின்னர்  இந்தியாவின் தலைநகர் புது டெல்லி புகை மூட்டமாக் காணப்பட்டனது.

தீபாவளி கொண்டாட்டங்களில் பட்டாசு வெடித்ததால், காற்றின் தரம் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக இந்திய தலைநகர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தியாவின் தலைநகரம், மோசமான தரமான காற்றைக் கொண்டிருப்பதாகத் தொடர்ந்து தரவரிசைப்படுத்தப்படுகிறது.

தடையை மீறு மக்கள் பட்டாசுகளைக் கொழுத்தியதால் இன்று வெள்ளிக்கிழமை தலைநகரம் அடர்த்தியான புகை மூட்டத்தால் சூழ்ந்தது.

 காற்றின் தரக் குறியீடு 345 க்கு மேல் இருந்தது என சுவிஸ் நிறுவனமான IQ ஏர் கூறியது. இது ஆபத்தானது நகரை மாசுபடுத்துகிறது எனக் குறி்ப்பிட்டது.

சமீபத்திய ஆண்டுகளில், புது தில்லியில் உள்ள அதிகாரிகள் தீபாவளியின் போது பாரம்பரிய பட்டாசுகளைப் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடைசெய்துள்ளனர். அதற்குப் பதிலாக அதிக சுற்றுச்சூழல் நட்பு விருப்பங்களுடன் ஒளித் திருவிழாவைக் கொண்டாடுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

தடையை அமல்படுத்துவது கடினம் அததேநரம் அடிக்கடி தடை மீறப்படுகிறது. சில இந்து குழுக்கள் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளன.  இது இந்து தெய்வமான லட்சுமியைக் கொண்டாடும் ஒளி திருவிழாவைக் கடைப்பிடிப்பதில் அவர்களின் திறனுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறினர்.

பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் வெடி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவே இத்தடை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தீபாவளி அன்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் இருந்து வெளிவந்த சிறிய துகள்கள் மற்றும் புகையினால் நுழையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இதனால் பல உடல்நலப் பிரச்சினைகள் வரக்கூடியவை.

தொடர்புடைய செய்திகள்