கௌதாரிமுனை-பளைபுதுக்காடு மணல் அகழ்வு தடை!

by guasw2

பளையின் புதுக்காடு மற்றும் பூநகரி கௌதாரிமுனை பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பாரிய மணல் அகழ்வினை தடுத்து நிறுத்த வடக்கு ஆளுநர் நாகலிங்கம் வேதநாதன் உத்தரவிட்டுள்ளார்.கொழும்பிலிருந்து வழிநடத்தப்படும் மணல் அகழ்வு அனுமதி பத்திரங்கள் விநியோக்கிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படாவிட்டால் ஜனாதிபதியின் கவனத்திற்கு விடயத்தை கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட மாநாட்டிலேயே ஆளுநர் அத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

புதுக்காடு மற்றும் கௌதாரிமுனை பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்துமாறு கோரி மக்கள் போராடியே வருகின்றனர்.

மணல் அகழ்வினால் கௌதாரிமுனை,வெட்டுக்காடு மற்றும் பரமன்கிராய் உள்ளிட்ட கிராமங்கள் முற்றாக அழிந்து போகின்ற நிலையில் காணப்படுகிறது. அதேவேளை பளையின் புதுக்காடு பகுதியில் நடைபெறும் மணல் அகழ்வினால் புகையிரத பாதை மூழ்கிப்போகலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.அதிலும் புதுக்காட்டினில் குளமொன்றை அழப்படுத்துவதாக தெரிவித்து இதுவரை 12ஆயிரம் டிப்பர் மணல் அகற்றப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

இதனிடையே தொடரும் மணல் அகழ்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் எதிர்கால திட்டமிடல்களை முன்னெடுக்க பொறியியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் குழுவொன்றை வடக்கு ஆளுநர் நியமித்துள்ளதாக தெரியவருகின்றது.  

தொடர்புடைய செய்திகள்