19
பொலிஸாரின் செயற்பாடுகளை பொதுமக்கள் காணொளிப் பதிவு செய்ய தடை இல்லை ! on Friday, November 01, 2024
பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளையோ அல்லது ஏனைய செயற்பாடுகளையோ பொதுமக்கள் காணொளிப் பதிவு செய்வதைத் தடுக்கும் சட்டம் எதுவுமில்லை என, அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனக்கு கீழ் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்குமாறு, பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் பல்வேறு செயற்பாடுகளை காணொளிப் பதிவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த காணொளி காட்சிகளை எடுத்தவர்களை கைது செய்துள்ளதாகவும்,இது அலைபேசிகளில் பதிவாகியுள்ளதாகவும் இந்த கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.