3
உத்தியோகபூர்வ இல்லங்களைக் கையளிக்காத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அந்த வீடுகளை மீள கையளிப்பதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
கடந்த அரசாங்க காலத்தின் போது உத்தியோகபூர்வ இல்லங்களைப் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவற்றை மீண்டும் இதுவரை கையளிக்கவில்லை.
அரச நிர்வாக அமைச்சின் மதிப்பீட்டிற்கு அமைய சம்பந்தப்பட்டவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.