பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளை காணொளி மூலம் பதிவு செய்ய எந்தத் தடையும் இல்லை.

by wamdiness

பொது இடங்களில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளையோ, ஏனைய செயற்பாடுகளையோ வீடியோ செய்வது தடை செய்யப்படவில்லை என பதில் பொலிஸ்மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

ஊடக அறிக்கையொன்றின் மூலம் அவர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புடைய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் கூடுதலாக பகிரப்பட்டன.

இதனையடுத்து பதில் பொலிஸ்மா அதிபருக்கும், பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஆனால் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு தடையை ஏற்படுத்தும் வகையில் எவருக்கும் காணொளிகளை பதிவு செய்ய முடியாது.

பல்வேறு தடவைகள் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் செம்மைப்படுத்தப்பட்டதன் பின்னரே சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருக்கின்றன.

காணொளிகள் பதிவு செய்யப்படுகின்ற பொழுது அருகில் உள்ள நபர்களின் தனிப்பட்ட நன்மதிப்பு பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்