லடாக்கில் சீன வீரர்களுடன் இந்திய இராணுவத்தினர் இனிப்பு பரிமாற்றம்!

by wp_fhdn

தீபாவளியை முன்னிட்டு வியாழன் அன்று (31) இந்திய மற்றும் சீன இராணுவத்தினர் லடாக்கில் உள்ள இரண்டு இடங்கள் உட்பட உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (LAC) ஐந்து இடங்களில் இனிப்பு தின்பண்டங்களை பரிமாறிக்கொண்டனர்.

லடாக்கில் உள்ள சுஷுல் மால்டோ, தௌலத் பெக் ஓல்டி, பாஞ்சா (கிபுட்டுக்கு அருகில்), அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பும்லா மற்றும் சிக்கிமில் உள்ள நாதுலா ஆகிய இடங்களில் இனிப்புகள் பரிமாறப்பட்டுள்ளன.

இது சீன-இந்திய உறவுகளில் ஒரு புதிய அத்தியாத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

கடந்த பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கிழக்கு லடாக்கில் LAC வழியாக ரோந்து மற்றும் வீரர்களை வெளியேற்றுவது தொடர்பாக ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.

இது நான்கு ஆண்டு கால மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.

ஒப்பந்தம் 2020 இலிருந்து எழுந்துள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வழிவகுக்கும் என்றும் இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி டெல்லியில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்