ஜப்பானின் அடையாளங்களில் ஒன்றாக காணப்படும் பூஜி (Fuji) எரி மலையானது இந்த ஆண்டு பனிப் பொழிவு இல்லாது காணப்படுகின்றது.
ஜப்பானின் மிக உயரமான சிகரம் தொடர்பான கடந்த 130 ஆண்டு கால கண்காணிப்பில் பனிப் பொழிவு இல்லாது பூஜி மலை காணப்படுவது இது முதல் சந்தர்ப்பமாகும்.
அத்துடன் இது, புவி வெப்பமயமாதல் பற்றிய காலநிலை மாற்றத்தின் மற்றொரு எடுத்துக் காட்டாகவும் அமைகிறது.
ஓய்ந்துள்ள புஜி எரிமலை, பொதுவாக வருடாந்தம் ஒக்டோபர் தொடக்கத்தில் பனியைக் காணும், எனினும் இந்த பருவத்தில் வழக்கத்திற்கு மாறாக வெப்பமான வானிலையால் பனிப்பொழிவை இன்னும் அது காணவில்லை என்று ஜப்பான் வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இறுதியாக கடந்த 2023 ஒக்டோபர் 5 ஆம் திகதி பூஜி மலை பனிப்பொழிவை அனுபவித்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புஜி மலையானது ஆண்டின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டிருக்கும், ஆனால் ஜூலை-செப்டம்பர் ஹைகிங் பருவத்தில் 220,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அதன் செங்குத்தான, பாறை சரிவுகளில் பயணம் செய்கிறார்கள்.
3,776 மீட்டர் உயரத்தில் இருந்து சூரிய உதயத்தைக் காண பலர் இரவு முழுவதும் மலை ஏறுவார்கள்.
இது இறுதியாக 300 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்தமையும் குறிப்பிடத்தக்கது.