தான் எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், கம்பஹா மக்கள் தன் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள் எனவும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர் ,இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாகும். எனது வேட்புமனுவை நிராகரிக்குமாறுக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக தேர்தலில் களமிறங்க எனக்கு எந்தவொரு தடையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. நான் அரசியலுக்கு வருவதையிட்டு, இவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், நான் எதற்கும் அஞ்சப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
அத்தோடு,தனக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள்கூட இத்தோடு முடிவடைந்துவிடாது. எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவுவரைக்கூட இவர்கள் எனக்கு எதிர்க்கத்தான் செயற்படப்போகிறார்கள். ஆனால், கம்பஹா மக்கள் என்மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். மக்களுக்காகத்தான் நான் கடந்த காலங்களில் செயற்பட்டேன். இந்த செயற்பாட்டை எதிர்க்காலத்திலும் தொடர்வேன் என ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.