ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவின் புதிய தலைவராக சுமதி தர்மவர்தன நியமனம்!

by wp_fhdn

இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றும் சுமதி தர்மவர்தன (Sumathi Dharmawardena) சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் ஊழல் எதிர்ப்புப் பிரிவின் (ACU)சுயாதீன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

14 வருடங்கள் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற சர் ரோனி ஃபிளனகனுக்குப் பதிலாக சுமதி தர்மவர்தன ACU இன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவரது நியமனம் 2024 நவம்பர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்.

சுமதி தர்மவர்தன, இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பல சட்ட சிக்கல்களில் அரசாங்கத்தையும் அதன் விளையாட்டு அமைச்சையும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

அவர், இன்டர்போல் மற்றும் போதைப்பொருள் குற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம், விளையாட்டு ஊழல் விவகாரங்களை விசாரணை செய்தல், விளையாட்டு சட்டம் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்குகளை மேற்பார்வையிடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்