உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட அடிப்படையில் ஆரம்பம்.

by adminDev2

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை தாமதப்படுத்தப்பட மாட்டாதென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட அடிப்படையில் அடுத்த மாதம் 25ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி வரை இடம்பெறவிருப்பதாகவும் அவர் கூறினார்.

பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதுபற்றி கருத்து வெளியிட்டார்.

உயர்தரப் பரீட்சை பற்றி பரவும் போலித் தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நேரசூசியை மாத்திரமே பயன்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மத்திய மாகாணத்தில் உள்ள சகல தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக நவம்பர் மாதம் 9ஆம் திகதி பாடசாலைகள் நடைபெறும் என்று மத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்