நாம் தற்போது பலமான கட்சியாக உருவெடுத்துள்ளோம்! -திலகரத்ன டில்ஷான்

by guasw2

”எமது கட்சிக்கு சேரு பூசும் நடடிவக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என ஐக்கிய ஜனநாயகக் குரல் (United Democratic Voice) கட்சியின் களுத்துறை  மாவட்ட வேட்பாளர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் முதலாவது மாநாட்டிற்கு பணம் கொடுத்து மக்கள் வரவழைக்கப்பட்டிருந்ததாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த போதே திலகரத்ன டில்ஷான் மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ரஞ்சன் ராமநாயகாவின் அரசியல் வருகையைத் தடுப்பதற்காக பலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாம் தற்போது பலமான கட்சியாக உருவெடுத்துள்ளோம். அதற்கு அண்மையில் சுகததாச  உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற எமது கட்சியின் முதலாவது பொதுமாநாடு சான்றாகும்.

இம் மாநாடானது  நாம் எதிர் பார்த்ததை விடவும் சிறப்பாக நடைபெற்றது. இம் மாநாட்டைக் காண  ஏராளமான மக்கள் வருகை தந்திருந்தனர்.  எந்த ஒரு பிரதான கட்சிக்கும் இது போன்ற மக்கள் கூட்டம் வந்ததில்லை.

பலர் உள்ளே அமர இடம் இல்லாமல் வெளியே இருந்ததையும் அவதானிக்க முடிந்தது. புதிதாகத் தோற்றம் பெற்றுள்ள  எமது கட்சிக்கு இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவு கிடைத்துள்ளமையை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.

எனினும் எமக்கு மக்கள் வழங்கி வரும் ஆதரவினை தடுக்கும் முயற்சியில்  பல்வேறு தரப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக  எமது கட்சியினர், மாநாட்டுக்கு பல்கலைக்கழக மாணவர்களை பணம் தருவதாக அழைத்து வந்து ஏற்மாற்றியதாக போலியான தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவலாகும். நாம் யாரையும் பணம் தருவதாகக் கூறி மாநாட்டிற்கு அழைக்கவில்லை . இது எமது கட்சியிக் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக எமக்கு வேண்டத் தகாதவர்கள்  முன்னெடுத்த செயற்பாடாகும்” இவ்வாறு திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்