2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பானது இலங்கைக்கு கடினமாக காணப்படுவதாக ஐசிசி கணித்துள்ளது.
தற்சமயம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை 55.56% புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான தலைகீழான வெற்றி என்பது, எஞ்சியிருக்கும் நான்கு டெஸ்டில் இருந்து மேலும் மூன்று வெற்றிகளுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான உத்வேகத்தை இலங்கை இன்னும் உருவாக்க முடியும்.
அதாவது, நவம்பர் இறுதியில் தென்னாப்பிரிக்காவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், 2025 இல் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு போட்டிகளிலும் இலங்கை முட்டி மோதும்.
இந்த நான்கு போட்டிகளில் இலங்கை மூன்று வெற்றிகளை பெற்றால், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெறும்.
எனினும், வலுவான அணிகளுடன் மோதுவதால் இலங்கை அணிக்கு இந்த நான்கு போட்டிகள் மிகவும் கடினமானதாக இருக்கும்.
அதேநேரம், இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரன்னர்-அப் இடத்துக்கு வந்த இந்திய அணிக்கு நியூஸிலாந்து அணியுடன் உள்ளூரில் ஒரு டெஸ்ட் போட்டியும், அவுஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகளும் எஞ்சியுள்ளன.
இறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்கு எஞ்சியுள்ள போட்டிகளில் அவர்கள் குறைந்தபட்சம் நான்கில் வெற்றி பெற வேண்டும்.
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளர்களான அவுஸ்திரேலியா, இறுதிப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக விளையாடும் பாதையில் உள்ளது.
எனினும் அவர்கள், மீதமுள்ள ஏழு டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் நான்கில் வெற்றி பெற வேண்டும்.
இந்தியாவுடன் உள்ளூரில் 5 டெஸ்ட் போட்டிகளும், இலங்கையுடன் 2 டெஸ்ட் போட்டிகளும் அவர்களுக்கு எஞ்சியுள்ளன.