7
துயிலுமில்லம் வாடகைக்கு இல்லை!
மாவீரர்களின் தியாகங்களை அரசியல்வாதிகள் வியாபாரம் ஆக்காதீர்கள். மாவீரர் துயிலும் இல்லங்களில் நிம்மதியாக விளக்கேற்றுவதற்கு அனுமதியை பெற்றுத் தாருங்கள் வேறொன்றையும் நாங்கள் உங்களிடம் கேட்க வில்லையென மூன்று மாவீரர்களைப் பெற்ற தாய் நடராசா சீலாதேவி கோரிக்கைவிடுத்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் நடராசா சீலாதேவி கருத்து வெளியிடுகையில் துயிலுமில்லங்களை தமது அரசியல் நலன்களிற்காக கட்சிகள் ஒப்பந்தகார்களாக வாடகைக்கு ஆக்கிரமிதது வைத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.