காலாவதியான சீன உணவுகள் – சீன உணவுக் கடைக்கு சீல் ! on Sunday, October 27, 2024
சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உணவு, மருந்துகள் மற்றும் விட்டமின்கள் என்பன காலாவதியான பின்னர் மீண்டும் திகதி இடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மோசடியை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல சீன உணவு விற்பனை நிலையம் சீன உணவுகள், மருந்துகள் மற்றும் விட்டமின்களை விற்பனை செய்கிறது.
சீன உணவுகளை விரும்பும் இலங்கையர்களும் சீனர்களும் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர்.
இத்தகைய பின்னணியில் காலாவதியான பொருட்களின் லேபிள்களை மாற்றி மீண்டும் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்றனர் .;
அங்கு நடத்தப்பட்ட தேடுதலின் போது இது தொடர்பான தகவல்களை உறுதி செய்ய முடிந்தது.
அதன்படி, சம்பந்தப்பட்ட இடத்தில் ஒரு தொகை காலாவதியான உணவுப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்குள்ள சில பொருட்களுக்கு காலாவதி திகதிகள் கூட பொறிக்கப்படவில்லை என்பது விசேட அம்சமாகும்.
மேலும் அந்த கடையில் காலாவதியான மருந்துகள் மற்றும் விட்டமின்கள் பதுக்கி வைத்திருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
பின்னர், மூன்று மாடிகளைக் கொண்ட குறித்த கடைக்கு, நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் சீல் வைத்தனர்.