ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள்! இரு ஈரானியப் படைவீரர்கள் பலி!

by sakana1

இஸ்ரேல் மீது ஈரான் மற்றம் அதன் ஆதரவு அமைப்புகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி நடத்தப்படுவதாக இஸ்ரேல் அறிவித்தது.

ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, இஸ்ரேலியப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்துகின்றன என்பதை உறுதிப்படுத்தும் வீடியோ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஈரானிடம் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஈரானிய தலைநகரைச் சுற்றி குறைந்தது ஏழு வெடிப்புச் சத்தங்களை செவிமடுத்ததாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஈரானின் தலைநகரில் கேட்கப்பட்ட சில வெடிப்புச் சத்தங்கள் தெஹ்ரானில் பாதுகாப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்டவை என்றும்  இந்த சம்பவத்தின் போது வான் பாதுகாப்பு வெற்றிகரமாக இருந்தது என்று பாதுகாப்பு ஆதாரத்தை மேற்கோளிட்டுள்ளது ஈரானின் உத்தியோகபூர்வ IRNA செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தெஹ்ரானின் மேற்கு அல்லது தென்மேற்கில் உள்ள IRGC இராணுவ மையங்களில் இதுவரை எந்த வெடிப்புச் சம்பவங்களும் பதிவாகவில்லை என்று ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் கூறுகிறது.

இஸ்ரேல் மீது ஈரான் போர் விமானங்களைப் பயன்படுத்தி வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்தது.

ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

இஸ்ரேலியப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்துகின்றன என்பதை உறுதிப்படுத்தும் வீடியோ அறிக்கையை இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி வெளியிட்டுள்ளார்.

முதலில் ஈரானிய தலைநகரைச் சுற்றி குறைந்தது ஏழு வெடிப்புச் சத்தங்களை செவிமடுத்ததாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஈரானின் தலைநகரில் கேட்கப்பட்ட சில வெடிப்புச் சத்தங்கள் தெஹ்ரானில் பாதுகாப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்டவை என்றும்  இந்த சம்பவத்தின் போது வான் பாதுகாப்பு வெற்றிகரமாக இருந்தது என்று பாதுகாப்பு ஆதாரத்தை மேற்கோளிட்டுள்ளது ஈரானின் உத்தியோகபூர்வ IRNA செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தெஹ்ரானின் மேற்கு அல்லது தென்மேற்கில் உள்ள IRGC இராணுவ மையங்களில் இதுவரை எந்த வெடிப்புச் சம்பவங்களும் பதிவாகவில்லை என்று ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் கூறுகிறது.

எனினும் தற்போது இஸ்ரேலின் தாக்குதலில் Ilam, Khuzestan மற்றும் Tehran ஆகிய மாகாணங்களில் உள்ள 20 இராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. வரைறுக்கப்பட்ட தேசத்தை ஏற்படுத்தியதாக ஈரானிய இராணுவம் கூறியது.

தெஹ்ரானின் இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையம் வழமை போல் அமைதியாக இயங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. பின்னர் ஈரானும் இஸ்ரேலும் தங்களது வான்வெளியை மூடியிருந்தன.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் மத்திய பிராந்தியத்தின் புறநகர்ப் பகுதிகளில் வெடிப்புகள் நடந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதலுக்காக ஜோர்டான் மற்றும் ஈராக் வான்வெளியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து போர் விமானங்களும் தங்களுடைய விமானத் தளத்தை வந்தடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

இஸ்ரேலியத் தாக்குதல்களை ஈரானின் வான்கவச பாதுகாப்பு அமைப்புகள் சிறப்பாக செயற்பட்டதால் பேரிய தேசங்கள் ஏற்படவில்லை என ஈரான் தரப்புச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

In response to months of continuous attacks from the regime in Iran against the State of Israel—right now the Israel Defense Forces is conducting precise strikes on military targets in Iran.

The regime in Iran and its proxies in the region have been relentlessly attacking… pic.twitter.com/OcHUy7nQvN

— Israel Defense Forces (@IDF) October 25, 2024

தொடர்புடைய செய்திகள்