நீதிமன்ற கோவைகளிற்கு ஆபத்தாம்!

by guasw2

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக கிடைத்த அறிவிப்பினையடுத்து இன்று வெள்ளிக்கிழமை (25) அதிகாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினர்; பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்க்க போவதாக இலங்கை காவல்துறைக்;கு கடிதம் ஒன்று இனம் தெரியாதோரால் நேற்று வியாழக்கிழமை (24) அனுப்பப்பட்டுள்ளது.

அதனையடுத்து கட்டிடத் தொகுதியை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டதுடன் அந்த பகுதியில் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை மட்டக்களப்பில் சீயோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட சந்தேக நபர்களின் வழக்குகள் இந்த நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

வழக்கின் ஆவணங்கள் இந்த நீதிமன்ற கட்டிட தொகுதியின் களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மட்டக்களப்பின் பாசிக்குடா பகுதியில் தாக்குதலிற்கான முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தில் கைதான மூவரும் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

எனினும் பெருமளவிலான சுற்றுலாப்பயணிகள் பாசிக்குடா பகுதியிலிருந்து வெளியேறியதனையடுத்து அப்பகுதி வெறிச்சோடியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்