கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை !

by adminDev

கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை ! on Friday, October 25, 2024

அரிசியை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சந்தை விலை தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாகவும் வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம்.நைமுதீன் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள், மாவட்ட மட்டத்தில் அரிசியின் விலை குறித்த ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர். அரிசி ஆலை உரிமையாளர்கள் அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசியை 218 ரூபா என்ற அடிப்படையில் சந்தைக்கு விடுவதற்கு இணக்கம் வெளியிட்டனர்.

அதற்கமைய சந்தையில் நாட்டு அரிசியை 220 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும்.

இதனால் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம்.நைமுதீன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்