ஐ.நாவின் உலங்கு வானூர்தி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தரையிறக்கம்

by adminDev

ஹைட்டியில் ஆயுதமேந்திய குழு  ஐநாவின் உலங்கு வானூர்தி  மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் தரையிறங்கும்படி கட்டாயப்படுத்தியது.

மூன்று பணியாளர்கள் மற்றும் 15 பயணிகளுடன் உலங்கு வானூர்தி பாதுகாப்பாக தலைநகரில் தரையிறங்கியதாக அசோசியேட்டட் பிரஸ் மற்றும் பிற அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.

ஆயுதமேந்திய கும்பல்களால் ஆளப்படும் சாலைகள் மற்றும் இடங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட சமூகங்களில் உள்ள மில்லியன் கணக்கான ஹைட்டியர்களுக்கு உணவு மற்றும் பிற உதவிகளை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உலங்கு வானூர்திகள் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்குச் சொந்தமான உலங்கு வானூர்தி மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

ஆயுதமேந்திய கும்பல்கள் தங்கள் செல்வாக்கை இன்னும் அதிகமாகச் செலுத்த முயற்சிப்பதாக வன்முறையின் பெருக்கம் கவலையைத் தூண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்