நீதி கேட்கிறார் மின்னல் ரங்கா!

by adminDev

நீதிபதி தொடர்பில் சேறு பூசும் சுவரொட்டிகளுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சிறீரங்காவுக்கு தொடர்பு இருக்குமாயின், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு, கொழும்பு  பிரதம நீதவான் திலின கமகே, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹம்மட் மிஹாலுக்கு எதிராக, சேறு பூசும் வகையிலான சுவரொட்டிகள் கொழும்பில்  ஒட்டப்பட்டிருந்தமை தொடர்பில் விசாரணை நடத்திய காவல்துறையினர் அண்மையில்   ஒருவரை கைது செய்திருந்தனர்.

எனினும் அச்சுவரொட்டிகளை ஒட்டுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் வவுனியாவில் சுயேட்சையாக போட்டியிடுபவருமான சிறீPரங்கா, கூறினார் என கைதானவர் வாக்குமூலமளித்திருந்தார்.

இந்நிலையில்   நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறீரங்காவை கைது செய்ய கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் ரங்காவின் வீட்டுக்கு சென்றபோதும் அங்கு அவர் இருக்கவில்லை.அதனால், உடனடியாக அவரை தேடிக்கண்டுபிடித்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு  பிரதம நீதவான் திலின கமகே, திங்கட்கிழமை (22) உத்தரவிட்டார். 

இந்நிலையில் புதிய நீதித்துறை அமைச்சரிடமும் ஜனாதிபதியிடமும் 2012 ஆம் ஆண்டு மன்னார் நீதிமன்றத்தில் நடந்த அநியாயம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் சிறீரங்கா. சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக மீண்டும் கலந்துரையாடப்பட்டு தாக்குதலின் பின்னணியிலுள்ள முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் உள்ளிட்ட சூத்திரதாரிகள் கைது செய்யப்பட வேண்டுமென சிறீரங்கா வவுனியாவில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்