17
பிரான்ஸில் தமிழ் இளைஞர்கள் பணியாற்றும் உணவகம் ஒன்றில் வெளிநாட்டவர் மீது கொடூரமான முறையில் கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வால்டுவாஸ் மாவட்டத்திற்குட்பட்ட அர்ஜோன்தொய் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மத்திய கிழக்கு நாட்டை சேர்ந்த வர்த்தகருக்கு சொந்தமான குறித்த உணவகத்தில் தமிழ் இளைஞர்களும் பணியாற்றி வருகின்றதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இளைஞர் குழுவொன்று உணவகத்தில் மது அருந்திக் கொண்டிருந்த வேளையில், திடீரென வந்த இளைஞன் அங்கிருந்தவர் மீது கத்தித் குத்து தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த தாக்குதலுக்கான காரணம் வெளியாகாத நிலையில் , இது நிழல் வர்த்தகம் தொடர்பில் ஏற்பட்ட மோதலாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.