கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் விநியோகிக்கப்படுவதாக சபை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, வத்தளை, மாபொல, ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவை நகரசபை பகுதிகள், வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான மற்றும் மினுவாங்கொட பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
உயரமான இடங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதன் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நாளை நண்பகல் 12 மணியளவில் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும் கூறப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.