ஈஸ்டர் தாக்குதல்:அனுரவுக்கும் தலையிடி!

by guasw2

ராஜபக்சக்களை சிக்கவைக்கலாமென எதிர்பார்க்கப்படும் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை அனுர அரசும் முடக்கி வைக்க முற்பட்டுள்ள போதும்  அது கேள்விக்குள்ளாகியுள்ளது.

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வௌியிடப்படாமல் இருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை காலை 10 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்துதெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“இந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றி, அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்படும் அபாயத்தைத் தவிர்க்க இன்று காலை 10 மணி வரை காலவகாசம் உள்ளது.

ஜனாதிபதி அரசியலமைப்பின் 38 ஆவது சரத்தை மீறி, குறித்த காலப்பகுதிக்குள் இந்த அறிக்கையை வழங்கத் தவறினால், நான் நிச்சயமாக அந்த அறிக்கைகளை முன்வைப்பேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்