யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் கண் வைத்தியசாலை அமைக்க என நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் மர நடுகை செய்யப்பட்டது.
அரியாலை சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் சுப்பிரமணியம் பாலேந்திரா, யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் அரியாலை பகுதியில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் காணியை கண் வைத்தியசாலைக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அக் காணியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த சத்தியமூர்த்தி தலைமையில் மரநடுகை செய்யப்பட்டது.
நிகழ்வில் யாழ் . போதனா வைத்தியசாலை உதவி பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா , கண் வைத்திய நிபுணர் வைத்தியர் மலரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
குறித்த காணியில் கண் வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் , அது வடமாகாண மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் , நன்கொடையாளர்கள் , பொதுமக்கள் வைத்தியசாலை நிர்மாணிப்புக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி கோரியுள்ளார்.