ஆடை விற்பனை நிலையத்தில் வெடித்த கையடக்க தொலைபேசி !

by adminDev

ஊழியர் ஒருவர் கையடக்க தொலைபேசி ஒன்றை சோதனை செய்துகொண்டிருந்த தருணத்தில், குறித்த கையடக்க தொலைபேசி வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று (19) ஹட்டனில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.

நீண்ட நாட்களாக செயழிழந்து காணப்பட்ட கையடக்க தொலைபேசியின் பேட்டரியை சோதித்து பார்க்குமாறு ஊழியர் ஒருவர் தனது நண்பரிடம் கூறினார்.

அப்போது கையடக்க தொலைபேசியை சோதனை செய்தபோது, அதிலிருந்த பேட்டரி வெடித்து அதில் தீப்பிடித்தது.

இந்த வெடி விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கையடக்க தொலைபேசிகளின் பேட்டரிகள் அதிக நேரம் சார்ஜ் செய்யப்படுவதே இதற்கு காரணம் என கையடக்க தொலைபேசி பழுது பார்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், பேட்டரிகள் வீங்கி வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்

தொடர்புடைய செய்திகள்