பட்டிருப்புக்கல்வி வலயத்தில் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் செயலமர்வு. on Saturday, October 19, 2024
(சித்தா)
இன்று பட்டிருப்புக்கல்வி வலயத்தின் போரதீவுப்பற்றுக்கோட்டத்திலுள்ள மட்/பட்/கோவில்போரதீவு/விவவேகானந்தா மகாவித்தியாலயத்தை மத்திய நிலையமாகக் கொண்டு மட்/பட்/மண்டூர் 37 நவகிரி மகாவித்தியாலயம், காக்காச்சிவட்டை விஸ்ணு மகாவித்தியாலயம், வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயம், கோவில்போரதிவு விவவேகானந்தா மகாவித்தியாலயம், பெரியபோரதீவு பாரதி மகாவித்தியாலயம், முனைத்தீவு சக்தி மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 12 இல் கற்கும் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வுச் செயலமர்வு வலயக்கல்விப்பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் இன் வழிகாட்டலில் முறைசாராக்கல்வி இணைப்பாளர் றீற்றா கலைச்செல்வனின் ஒழுங்குபடுத்தலில் மேற்கொள்ளப்பட்டது. இதில் வளவாளர்களாக வலயக்கல்விப்பணிப்பாளர், முறைசாராக்கல்வி இணைப்பாளர், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் சி.கவியரசன், வழிகாட்டல் ஆலோசனை ஆசிரிய ஆலோசகர் பா.துஸ்யந்தன் ஆகியோர் கலந்துகொண்டு தொழிற்தகமை,(NVQ), கல்வித்தகமை (SLQF) இலக்கை நோக்கிய விடயங்கள் தொடர்பாக விழிப்புணர்வுவை ஏற்படுத்தினர். இச்செயலமர்வானது 18.10.2024 அன்று மட்/பட்/செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தை மத்திய நிலையமாகக் கொண்டு மட்/பட்/குருக்கள் மடம் கலைவாணி மகாவித்தியாலயம், மட்/பட்/செட்டிபாளையம் மகாவித்தியாலயம், மட்/பட்/மாங்காடு சரஸ்வதி மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து 70 மாணவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் போரதீவுப்பற்றுக்கோட்டத்தில் இன்னும் இருபாடசாலைகளை மத்திய நிலையங்களாகக்கொண்டும், மண்முனை தென் எருவில் பற்றுக்கோட்டத்தில் இரு பாடசாலைகளை மத்திய நிலையங்களாகக் கொண்டும் ,மண்முனை தென் எருவில் பற்றுக்கோட்டத்தில் இரு பாடசாலைகளை மத்திய நிலையங்களாகக்கொண்டும் 1AB,1C பாடசாலைகள் என உயர்தர வகுப்புக்களைக் கொண்டுள்ள 25 பாடசாலைகளில் தரம் 12 இல் கற்கும் 1006 மாணர்களுக்கும் 6 பாடசாலைகளை மத்திய நிலையங்களாகக்கொண்டு இவ் விழிப்புணர்வுச் செயலமர்வு எதிர்வரும் வாரத்தில் நடாத்தத்திட்டமிடப்பட்டுள்ளது.