தெலங்கானா: பழங்குடி கிராமத்தில் கன்டெய்னரில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம்
தெலங்கானா: பழங்குடி கிராமத்தில் கன்டெய்னரில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம்
தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தின் எட்டுருநகரம் காட்டுயிர் சரணாலயத்தில் உள்ள பங்கருபள்ளி ஆதிவாசி கிராமத்தில் ஒரு கன்டெய்னர் பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் இருந்து புலம்பெயர்ந்த கொட்டி கோயா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆதிவாசி குடும்பங்கள் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றன.
வனத்துறை விதிகளின்படி, காப்புக் காட்டுக்குள் நிரந்தர கட்டுமானங்களை அமைக்க முடியாது. இந்த விதியின் காரணமாக, பங்கருபள்ளி கிராமத்தின் தொடக்கப்பள்ளி கடந்த 14 ஆண்டுகளாக ஒரு சிறிய ஓலைக் குடிசையில் இயங்கி வந்தது. இதற்குத் தீர்வாக மாவட்ட நிர்வாகம் இந்த கன்டெய்னர் பள்ளியைக் கொண்டு வந்தது.
தற்போது இந்தப் பள்ளியில் 21 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கன்டெய்னருக்கு வர்ணம் பூசப்பட்டால், 25 ஆண்டுகள் வரை இது உறுதியாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். 25க்கு 25 என்ற அளவிலான இந்த கன்டெய்னர் பள்ளியை உருவாக்க 13.5 லட்சம் செலவானது என்று மாவட்ட ஆட்சியர் திவாகர் கூறுகிறார்.
முழு விவரம் காணொளியில்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.