8
வடக்கு நைஜீரியாவில் எரிபொருளை எடுக்க கூடியிருந்த உள்ளூர்வாசிகள் அருகே எரிபொருள் டேங்கர் வெடித்ததில் குறைந்தது 94 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 54 பேர் காயமடைந்தனர்.
ஜிகாவா மாநிலத்தில் உள்ள மஜியா என்ற கிராமத்தில் நேற்று செவ்வாய்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணியளவில் நடந்த இந்த வெடிப்பில் பலி எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கானோ மாநிலத்தில் இருந்து யோபே மாநிலத்தில் உள்ள நுகுரு நகருக்குச் செல்லும் வழியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் கவிழ்ந்தது. விபத்து நடந்த சிறிது நேரத்தில், அங்கு வெடிவிபத்து ஏற்பட்டு பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவத்தை அடுத்து அருகில் இருந்து குடியிருப்பாளர்கள் எரிபொருளை எடுக்க விரைந்தனர். இந்நிலையில் அங்கு வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டது.