6
சுற்றுலாச் சென்ற பல்கலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி ! on Tuesday, October 15, 2024
நுவரெலியா, பொகவந்தலாவையில் மலைப்பகுதிக்குச் சுற்றுலாச் சென்ற ஆறு பல்கலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
உறுகுணை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 06 மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பல்கலை மாணவர்களின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.