77 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் !

by adminDev

on Tuesday, October 15, 2024

77 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.77 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற போதே அமைச்சரவைப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சுக்கள், திணைக்களங்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதானிகளின் பங்கேற்புடன் வழிநடாத்தல் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீதி, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ள10ராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்