அரச வாகனங்கள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

by wp_fhdn

அரசினால் பல்வேறு நோக்கங்களுக்காக வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ பயன்படுத்தப்பட்டால் அல்லது மறைத்து வைக்கப்பட்டிருந்தால் 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த அவசர தொலைபேசி தொலைப்பேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் பாவனையில் காணப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகவல் அளிப்பவர்களின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட விபரங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உண்மையான தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும் எனவும் தவறான தகவல்களை வழங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்