by admin

on Monday, October 14, 2024

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை வழங்கும் பணிகள் இன்று (14) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், முதற்கட்டமாக 15,000 ரூபாயும் மற்றும் இரண்டாம் கட்டமாக 10,000 ரூபாயும் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நடவடிக்கையானது அம்பாறை (Ampara) மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொலன்னறுவை (Polonnaruwa), அனுராதபுரம் (Anuradhapuram) மற்றும் மகாவலி பிரதேசம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 25,000 உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை என விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம்.விக்ரமசிங்க (M.B.N.M.Wickramasinghe) அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்