தேர்தலிற்கு முன்னதாகவே புதிய ஜனாதிபதியுடன் கூட்டுச்சேர வடகிழக்கில் தமிழ் தரப்புக்கள் தயராகியுள்ளமை அனுர கருத்தால் அம்பலமாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் ஒன்றுகூடலொன்று தலவத்துகொட கிறேன்ட் மொனார்க் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுக்களிலிருந்து நாடாளுமன்றத்தை விடுவிப்பதற்கான சிறந்தவொரு சந்தர்ப்பமே பொதுத் தேர்தல். வடக்கின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரை சந்தித்த போது, வடக்கு மக்கள் எம்முடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
நாடாளுமன்றம் வலுவான பிரதிநிதித்துவத்தையும் பண்புகளையும் கொண்டிருக்க வேண்டும்.
எனவே நாட்டுக்காக சில தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு தேவையான பலமான அரசியல் பலத்தை நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பெற வேண்டும்” என்றார்.