பிபிசி செய்தி அறைக்குள் நுழைய விருப்பமா? – மெட்டாவெர்ஸ் உலகுக்கு உங்களை வரவேற்கிறோம்
100 ஆண்டுகளுக்கும் மேலாக பிபிசி செய்தி மற்றும் பொழுதுபோக்கு உலகில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா?
தகவல்களை சொல்ல, கற்பிக்க மற்றும் பொழுதுபோக்கு நோக்கத்துடன் 1922ஆம் ஆண்டு பிபிசி தொடங்கப்பட்டது.
100 ஆண்டுகளுக்கும் மேலாக பாரபட்சமற்ற ஊடகவியலை நாங்கள் வழங்கி வருகிறோம். மேலும் ஊக்கமளிக்கும் மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை உருவாக்கி வருகிறோம்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவாகட்டும், மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ 11 விண்கலத்தின் பயணமாகட்டும், வங்கதேசத்தின் சுதந்திரம், 1983 உலகக் கோப்பை , சமீபத்திய போர் மற்றும் மோதல்கள் என அனைத்து விஷயங்களிலும் பிபிசி உங்களுக்கு செய்திகளை வழங்கியது.
100 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள மக்கள் நேர்மையான, சுதந்திரமான ஊடகவியலுக்காக எங்களை நம்பியுள்ளனர். பிபிசி நியூஸின் ஒரு பகுதியான உலக சேவை, 40க்கும் மேற்பட்ட மொழிகளில் வாரத்துக்கு 318 மில்லியன் மக்களைச் சென்றடைகிறது.
ஆனால், ஒரு செய்தி அறையில் எப்படி வேலை நடக்கிறது, அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அந்தக் கேள்வி உங்கள் மனதிலும் இருந்தால், இதோ உங்களுக்கான வாய்ப்பு. பிபிசி நியூஸின் மெட்டாவெர்ஸ் அறைக்குள் நுழைய தயாராகுங்கள்.
லண்டன் பிராட்காஸ்டிங் ஹவுஸ் மற்றும் எங்கள் பிற பணியகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நீங்கள் நேரடியாகப் பார்ப்பீர்கள். நம்பகமான செய்திகளுக்குப் பின்னால் உள்ள அடிப்படை விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள், போலிச் செய்திகளைக் கண்டறிவது எப்படி என்பதையும் கற்றுக்கொள்வீர்கள். மேலும், வினாடி வினா மூலம் உங்கள் அறிவையும் சோதிக்கலாம்.
அதுமட்டுமல்ல, பிபிசி நியூஸின் முகப்பு பக்கத்தையும் நீங்கள் உருவாக்கலாம். அதோடு, பிபிசி மெட்டாவெர்ஸ் அறையில் செல்ஃபி எடுக்கவும், உங்களுக்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்யவும் மறக்காதீர்கள்.
எனவே, பிபிசி மெட்டாவெர்ஸ் அறைக்கு உங்களை வரவேற்கிறோம். இது சிறப்பான மற்றும் புதிய அனுபவமாக உங்களுக்கு இருக்கப் போகிறது. உள்ளே நுழைய இங்கே க்ளிக் செய்யவும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு