தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு இன்று தனது 42 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இந்நிலையில் அவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில் ‘தக் லைஃப்‘ படக் குழுவினர் வீடியோயொன்றினை வெளியிட்டு சிம்புவிற்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் ,ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சிம்புவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் தக் லைஃப் படத்தை தயாரித்துள்ள ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த வீடியோவில் நடிகர் சிம்பு கையில் துப்பாக்கியுடன் அமர்ந்து இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. வீடியோ முடிவில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் எஸ்.டி.ஆர். என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சிம்பு பிறந்த நாளை ஒட்டி அவரது படம் குறித்த வீடியோ வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ –https://twitter.com/RKFI/status/1886255807878283428