நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு எதிர்வரும் 24 மணிநேரத்திற்கு மிதமான நிலையில் காணப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நுவரெலியா நகரில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பாக கொழும்பு 07, குருணாகல், வவுனியா, கண்டி, கேகாலை, நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் சீரான நிலையிலும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் காணப்படும் வேளைகளில காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு அடுத்த 24 மணிநேரத்துக்குள் ஒரு நல்ல நிலைக்கு மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.