இந்துக்களின் சமர் எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பம்!

by adminDev

இந்துக்களின் சமர் என வர்ணிக்கப்படுகின்ற பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மற்றும் யாழ்.இந்து கல்லூரிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெறுவதாக இருந்த போதிலும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டியை  யாழில் நடத்த யாழ். இந்து கல்லூரி முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பம்பலப்பிட்டி கல்லூரி அடுத்த வருடம் தனது பவள விழா கொண்டாட்டங்களை மிகவும் பிரமாண்டமான முறையில் ஆரம்பிக்கவுள்ளதால் இந்துக்களின் சமரையும் அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டி தொடர்பான ஊடக சந்திப்பும், அண்மையில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. யாழ். இந்து கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கும் இடையிலான 14ஆவது வருடாந்த ‘இந்துக்களின் சமர்’ யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்