குயின்ஸ்லாந்தில் வெள்ளம் மோசமாகி வருவதால், அவுஸ்திரேலியப் பிரதான நெடுஞ்சாலையின் சில பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மாநிலத்தின் வடக்கில் பெய்த மழையால் இதுவரை ஒரு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அனர்த்தத்தினால் டவுன்ஸ்வில்லே, இங்காம் மற்றும் கார்ட்வெல் போன்ற சமூகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் நீர் மட்டம் உயரும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பிராந்தியத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே சனிக்கிழமை (01) முதல் 1.3m (4.2 அடி) மழை பெய்து வருகிறது, இதனால் அணைகள் மற்றும் ஆறுகள் நிரம்பி வழிகின்றன.
குயின்ஸ்லாந்து மாநில அதிகாரிளின் தகவலின்படி, வெள்ளிக்கிழமை முதல் வடகிழக்கு குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் 1,000 மிமீ (39 அங்குலம்) மழை பெய்துள்ளது.
60 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் இதுவாக இருக்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியதாக பிபிசி தெரிவித்துள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவின் வானிலை ஆய்வுப் பணியகம், மூன்று நாட்களில் ஆறு மாத மழையைப் பதிவு செய்ததாக கூறியுள்ளது.