16 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளத்தை பாவிக்க அவுஸ்திரேலியா தடை.

by wp_shnn

சமூக வலைதள பயன்பாடு பற்றிய புரட்சிகரமான சட்டத்தை நிறைவேற்ற அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

16 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் சமூக வலைதள பாவனை தடை செய்யப்படும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அன்டோனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கோடு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், ஏற்கனவே சமூக வலைதளத்தை பயன்படுத்தும் இளைஞர் – யுவதிகளுக்கு பாதிப்பு ஏற்பட மாட்டாது என்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்