by wamdiness

அரச இல்லத்திலிருந்து வெளியேறுமாறு மஹிந்தவுக்கு இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சி உறுப்பினரை போல் பேசுகிறார். அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு ஏதும் கிடைக்கப்பெறவில்லை.

மக்கள் மத்தியில் பொய்யுரைக்காமல் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மக்கள் விடுதலை முன்னணி தேசிய மக்கள் சக்தி என்ற போலியான நாமத்தில் வந்து ஒட்டுமொத்த மக்களையும், தேசியத்தையும் ஏமாற்றியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் அரச நிதியை கொள்ளையடித்து அவற்றை பிற நாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாகவும், ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றை அரசுடமையாக்குவதாகவும் குறிப்பிட்டது. மக்களக்கு குறிப்பிட்ட பல பொய்களில் இதுவும் ஒன்று,

நடுத்தர மக்கள் விக்ஸ் ரக மோட்டார் காரை 10 இலட்சம் முதல் 12 இலட்சம் ரூபா வரையிலான குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யும் சூழலை ஏற்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி தேர்தல் பிரச்சாரம் செய்தது.

ஆனால் இன்று இறக்குமதி செய்யும் வாகனங்களில் விலை வானளவில் உயர்ந்துள்ளது. வாகன கொள்வனவு என்பது வெறும் கனவாகவே காணப்படுகிறது.

விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை கூட இதுவரை நிர்ணயிக்கவில்லை. விவசாயிகள் விசம் குடிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்துள்ள நிலையில் மக்களின் கவனத்தை திசைத்திருப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள சலுகைகளை இரத்துச் செய்வதற்கு முயற்சிக்கிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சி உறுப்பினரை போல் பேசுகிறார்.அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு ஏதும் கிடைக்கப்பெறவில்லை.

மக்கள் மத்தியில் பொய்யுரைக்காமல் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்