இரத்தினபுரியில் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட ஐந்து வாகனங்கள் கைப்பற்றல்! இரத்தினபுரி, கலவானை, பொல்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள வாகன விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட ஐந்து வாகனங்கள் வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்டு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக வலான ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட வாகனங்களின் மொத்த மதிப்பு ஏழு கோடி ரூபா ஆகும்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் பொலிஸ் விசாரணையின் போது திடீரென சுகயீனமுற்று மயக்கமடைந்துள்ள நிலையில் இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.