சிட்னியில் தொடரும் யூதஎதிர்ப்பு சம்பவங்கள் -யூத பெண்களை இலக்குவைத்து முட்டை தாக்குதல் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பொன்டி கடற்கரையில் ஐந்து பெண்களை இலக்குவைத்து யூத எதிர்ப்பு தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்களை இலக்குவைத்து முட்டைகள் எறியப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார் இதனை யூதஎதிர்ப்பு தாக்குதல் என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.
பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் காரணமாக அவர்கள் இலக்குவைக்கப்பட்டிருக்கலாம் என பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பேர்ள் என்ற படையணியின் தளபதி தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் காணப்பட்ட கார் ஒன்றை பின்னர் வேறு பகுதியில் மீட்டுள்ளதாகவும் அதற்குள் முட்டைகள் உட்பட வேறு பொருட்கள் காணப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
பொன்டி கடற்கரையில் உள்ள கம்பெல் பரேட் வீதியில் தங்கள் மீது முட்டைகள் எறியப்பட்டதாக பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன் பின்னர் விபத்துக்குள்ளான நிலையில் கார் ஒன்று மீட்கப்பட்டது அதற்குள் முட்டைகள் உட்பட பல பொருட்கள் காணப்பட்டன காரின் இயந்திரம் செயற்பட்டுக்கொண்டிருந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் அந்தபகுதிக்கு சென்றவேளை மூன்று இளைஞர்கள் தப்பிச்சென்றுள்ளனர் அவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சிட்னியில் இனந்தெரியாதவர்கள் வாகனங்கள் மீதும் வீட்டு சுவர்கள் மீதும் யூத எதிர்ப்பு வாக்கியங்களை எழுதியுள்ளனர் படங்களை வரைந்துள்ளனர்.
யூதர்கள் அதிகமாக வசிக்கும் சிட்னியின் கிழக்கு பகுதியில் நேற்றிரவு இனந்தெரியாதவர்கள் வாகனங்கள் மீதும் வீட்டு சுவர்கள் மீதும் யூத எதிர்ப்பு வாக்கியங்களை எழுதியுள்ளனர் படங்களை வரைந்துள்ளனர்.