&

by wp_shnn

‘சுதந்திரம் இல்லாமல் எனது வாழ்க்கை அர்த்தமற்றது- எங்களின் சுதந்திரத்தை பறித்த உலகம் அதனை மீள பெற்றுத்தரவேண்டும் உலகம் பாலஸ்தீனியர்களை புறக்கணித்துள்ளது அலட்சியம் செய்துள்ளது என தெரிவித்துள்ள இஸ்ரேலால் விடுதலை செய்யப்பட்டுள்ள பாலஸ்தீனியர் ஒருவர் தனது சுதந்திரம் பறிபோனதற்கு பிரிட்டனும் காரணம்  என தெரிவித்துள்ளார்.

2019 முதல் இஸ்ரேலின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜகைரியா ஜூபைதி என்பவரே இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என தெரிவித்து இஸ்ரேலிய நீதிமன்றம் இவருக்கு தண்டனை விதித்திருந்தது.

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இவர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கு கரையில் பெருமளவானவர்கள் இவரை வரவேற்றனர்.

போராட்டமே பாலஸ்தீனியர்களிற்கு சுதந்திரத்தை பெற்றுதரும் என தான் இன்னமும் நம்புவதாக ஸ்கைநியுசிற்கு தெரிவித்துள்ள அவர் சர்வதேச சமூகம் காரணமாகவே மேற்குகரையை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரம் இல்லாமல் எனது வாழ்க்கை அர்த்தமற்றது என ரமல்லாவில் தெரிவித்துள்ள அவர் சுதந்திரம் விலை மதிப்பற்றதுஇ என தெரிவித்துள்ளார்.

உலகம் எனது சுதந்திரத்தை பறித்துள்ளது- மறுத்துள்ளது என தெரிவித்துள்ள ஜகைரியா ஜூபைதி பிரிட்டன் பிரான்ஸ் அமெரிக்கா ஆகியநாடுகளே இதற்கு காரணம் அவர்கள்  எங்கள் குழந்தைகளிடமிருந்து பறித்ததை மீள திருப்பிதரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தங்கள் தவறுகள் குறித்து மீளாய்வு செய்யவேண்டியவர்கள் அவர்களே நான் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பிரான்ஸ் பிரிட்டன் போன்ற நாடுகளேஎங்களிற்கு தவறிழைத்துள்ளனஇஅவர்கள் எனக்கும் எனது பிள்ளைகளிற்கும் இழைத்த தவறுகளை சரி செய்வது குறித்து சிந்திக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளால் தனது பிள்ளைகள் சகோதரர்கள் உட்பட குடும்பத்தவர்கள் பலரை பறிகொடுத்துள்ள ஜகைரியா ஜூபைதி ஆறு பேரை கொலை செய்த 2002 குண்டுவெடிப்பில் தனக்கு தொடர்புள்ளதை  ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை இவரை பாலஸ்தீனியர்கள் தங்களின் எதிர்ப்புணர்வின் குறியீடாக காண்கின்றனர்.

இஸ்ரேலிய சிறைச்சாலையிலிருந்து சுரங்கம் தோண்டி தப்பிவெளியேறி பின்னர் கைதுசெய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

பாலஸ்தீன மக்கள் தங்கள் பாதுகாப்பு நலனிற்கு முக்கியத்துவத்தை வழங்கவேண்டும் என்பதே அவர்களிற்கான எனது செய்தி ஏனென்றால் அவர்கள் மீது பெரும் தாக்குதல் இடம்பெறுகின்றது  என குறிப்பிட்டுள்ள அவர் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிற்கு தன்னிடமிருந்து  எந்த செய்தியும் இல்லை என தெரிவித்துள்ளார்.

எனது நிலத்தில் வாழ்வதற்கு ஆக்கிரமிப்பாளர்களிற்கு அனுமதியளித்த அதேஉலகம் எனக்கான சுதந்திரத்தை வழங்கவேண்டும் என்பதே உலகிற்கான எனது செய்தி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்