3
கல்முனையில் பழுதடைந்த பழங்கள் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றல் கல்முனை நகர் பகுதியின் பிரதான வீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த ஒரு தொகை தோடம்பழங்கள் மற்றும் திராட்சைப் பழங்கள் கல்முனை பிராந்திய பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டன.
கல்முனை நகரில் பழுதடைந்த தோடம்பழங்கள் மற்றும் திராட்சைப் பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் பழுதடைந்த பழங்களை விற்பணைக்கு வைத்திருந்த வியாபாரிகளுக்குக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.