by wp_shnn

கொள்ளுப்பிட்டியில் வௌிநாட்டுப் பெண் மர்ம மரணம் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டுப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விஷ வாயுவை சுவாசித்ததே மரணத்திற்கான காரணம் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

கொள்ளுப்பிட்டி, முஹன்திரம் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் 30 வயதுடைய ஜேர்மன் நாட்டு ஆணொருவரும், 27 வயதுடைய ஜேர்மன் பெண் ஒருவர் மற்றும் 24 வயதுடைய இங்கிலாந்து நாட்டு பெண் ஒருவரும் தங்கியிருந்தனர்.

குறித்த மூவருக்கும் நேற்று (01) திடீரென வாந்தி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து, ஜேர்மன் தம்பதியினர் நேற்று (01) காலை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, நேற்று மாலை 7.30 மணியளவில், 24 வயதான இங்கிலாந்துப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததால், அம்பியூலன்ஸ் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்