1
மொஹமட் லஃபர் தாஹிர் பதில் நீதியரசராக நியமனம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தற்போது கடமையாற்றும் மிக மூத்த நீதிபதியான மொஹமட் லஃபர் தாஹிர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, நீதியரசர் மொஹமட் லஃபர் தாஹிர் இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பந்துல கருணாரத்ன ஓய்வு பெறுவதற்கு முந்தைய விடுமுறையைப் பெற்றுக் கொண்டிருக்கும் பட்சத்தில் அதை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது