by wp_shnn

தங்க சங்கிலிக்காக பெண் படுகொலை சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலியை அபகரிப்பதற்காக பெண் ஒருவர்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி வேவல்வத்த பொலிஸ் பிரிவில் கலபட பகுதியில் கருகப்பட்டை தோட்டத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கடந்த 31 திகதி கைப்பற்றப்பட்டது.

இரத்தினபுரி பன்னில,நிரிஎல்ல பகுதியை வசிப்பிடமாக கொண்ட, இரண்டு பிள்ளைகளின் தாயான  சுதுஹக்குருகே சோமாவதி (வயது 58) என்பவருடையது என  அடையாளம் காணப்பட்டார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அவர்களது மகனுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னர் கணவனும் மனைவியும் கலபட பகுதிக்கு வந்து தனியாருக்கு சொந்தமான காணியில் தங்கியிருந்து அவரது தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்கள்.

நாளாந்தம் மாலையில் அந்த பெண்ணின் கணவன் கலபட சந்தியில் உள்ள வியாபார நிலையங்களுக்கு சென்று வருவார்.

கடந்த 30 ஆம் திகதி மாலை 6.30 மணி அளவில் வழமை போல் கலபட பகுதியில் உள்ள வியாபார நிலையத்திற்கு  சென்று சில பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு திரும்பி வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த கணவர்  அவரது மனைவியை காணவில்லை  என்பதால்   அதிர்ச்சியடைந்து  காவலாளியின் உதவியுடன் வீட்டை சுற்றி தேடியுள்ளார்.

வீட்டை சுற்றி தேடி கிடைக்காததால் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்த பின்னர் வேவல்வத்த பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் அயலவர்களின் உதவியுடன்  தேடி பார்த்த போது வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர்  தொலைவில் உள்ள கருகப்பட்டை தோட்டத்தில் இருந்து குறித்த பெண்ணின் சடலத்தை கண்டுள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்