4
2025 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ள வாகன இறக்குமதியை இலகுபடுத்துவதற்கு இலங்கையின் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்வாகம் தயாராக உள்ளது.
2024 இல், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் 579,362 வாகனங்களை விடுவித்துள்ளது, இது 2023 இல் 238,997 ஆக இருந்தது.
இறக்குமதி மற்றும் டிரான்ஸ்ஷிப்மென்ட் வாகனங்கள் இரண்டையும் கையாளும் வகையில் குறைந்தபட்சம் 4,000 வாகனங்களை சேமிக்கும் திறன் கொண்ட முற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வில்சன் கியூ குறிப்பிட்டார்.
வாகனம் கையாளும் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வை பராமரிக்க மொபைல் மற்றும் ரோந்து பணிகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.