மீண்டும் இலங்கை வந்தார் ஜொன்டி ரோட்ஸ்!

by wp_fhdn

தென்னாபிரிக்காவின் கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் பீல்டிங் மாஸ்ட்ரோ ஜொன்டி ரோட்ஸ் இன்று (03) அதிகாலை இலங்கை வந்தடைந்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் அண்மையில் இலங்கை முழுவதும் ஒரு தனித்துவமான சுற்றுலா பயணத்தை மேற்கொண்டார்.

கிறிஸ்துமஸ் சீசனில் தனது குடும்பத்துடன் தீவு தேசத்தை சுற்றிப்பார்த்தார்.

ரோட்ஸ் குடும்பம் தெற்கு கடற்கரையில் பிரபலமான சர்ஃபிங் இடமான அஹங்கமாவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு முச்சக்கர வண்டி பயணத்தை மேற்கொண்டது.

ரோட்ஸ் தனது செழுமையான பயண அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

நாட்டின் துடிப்பான கலாச்சாரம், நிலையான சுற்றுலா முன்முயற்சிகள் மற்றும் மூச்சடைக்கக்கூடிய சுற்றுலா இடங்கள் மீதான அவரது ஈடுபாட்டை எடுத்துக் காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்