மன்னார் கடற்பரப்பில் 10 இந்திய மீனவர்கள் கைது!

by admin

தமிழகத்தின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி மன்னார் தெற்கே மீன்பிடியில்

ஈடுபட்டுக்கொண்டிருந்த போது  இலங்கை கடற்படையினரால் திங்கள்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையினரின் சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 10 மீனவர்களுடன் அவர்களது இயந்திரப் படகும் மன்னார், தல்பாடு கடற்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னார் கைது செய்யப்பட்ட மீனவர்கள், படகுடன் இலங்கை யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி நீதிமன்றக் காவலில் வைக்கப்படவுள்ளனர்.

கடந்த சனவரி 26, ஞாயிற்றுக்கிழமை, ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 34 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், மூன்று மீன்பிடி படகுகளையும் கைப்பற்றியது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சனவரி 28, செவ்வாய்கிழமை நடந்த மற்றொரு சம்பவத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்களது இயந்திரப் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

யூன் 16, 2024 முதல், இலங்கை கடற்படையினர் 425 தமிழக மீனவர்களை சிறைபிடித்து, 58 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு முதல் சுமார் 270 இழுவை படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தமிழக மீனவர் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

தொடர்புடைய செய்திகள்