3
வாடியடியிலுள்ள வீதியோர பேரூந்து தரிப்பிடங்கள் மற்றும் கைவிடப்பட்ட நிலையிலுள்ள பிரதேசசபையின் பழைய சந்தைக்கட்டடம் என்பவையே இரவு நேரங்களில் மதுப்பிரியர்களது சொர்க்கமாக இருந்துவருவதாக ஜனாதிபதி அலுவலகம் வரை முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு இரவு நேர மதுப்பிரியர்களது சொர்க்கமாகிவிடும் நிலையில் பகலில் அயலிலுள்ள பொதுமக்கள் உடைக்கப்பட்ட போத்தல்களை பொறுக்கிவீசி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய மதுப்பிரியர்களது அடாவடி தொடர்பில் வாடியடியிலுள்ள காவல் நிலையத்தில் முறையிட்டாலும் கண்டுகொள்வதில்லையெனவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஒதுக்கப்புறமாகவுள்ள பிரதேசசபையின் பழைய சந்தைக்கட்டடத்தொகுதியில் நள்ளிரவு தாண்டியும் மதுப்பிரியர்கள் கொண்டாடங்களை அரங்கேற்றிவருவதாகவும் வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.